வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு பகுதியில் தற்சார்பு நடவடிக்கை : அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய கண்ணோட்டத்துடன் விவசாயம்
Posted On:
21 FEB 2022 5:18PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில் உள்ள தியோமலி கிராமத்தில், பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலை மேற்கொள்கின்றனர். வடகிழக்கு பகுதியில் நிலவும் வேளாண் மற்றும் பருவ நிலைகள் , மசாலா பொருட்களை விளைவிப்பதற்கு மிகச் சிறந்ததாக உள்ளன.
அதனால் ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு பகுதி சமுதாய வள மேலாண்மை அமைப்பு, அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய் பகுதியில் உள்ள மசாலா வாரியத்துடன் இணைந்து, திராப் மாவட்டத்தில், தியோமலி கிராமத்தில் உள்ள பட்காய் மலைகள் நலச்சங்க அலுவலகத்தில், மசாலா பொருட்கள் விளைவிப்பவர்களுக்கு பயிற்சி வகுப்பை கடந்த 12ம் தேதி நடத்தியது.
இதில் 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மசாலா பொருட்களை விளைவிக்கவும், அவற்றை விற்று வருமான ஈட்டுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தி, வருமானத்தை பெருக்கி கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இனிவரும் காலத்தில் நம்சாங் மற்றும் சோஹா பகுதியிலும், இதுபோன்ற இன்னும் பல திட்டங்கள் அமல்படுத்தப்படும் என மசாலா வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800064
******
(Release ID: 1800094)
Visitor Counter : 196