குடியரசுத் தலைவர் செயலகம்

கடல்களின் நிலையான பயன்பாட்டிற்கான கூட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த, 'பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி'யை இந்தியா நம்புகிறது: குடியரசுத் தலைவர்

Posted On: 21 FEB 2022 2:19PM by PIB Chennai

கடல்களின் நிலையான பயன்பாட்டிற்கான கூட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, ‘பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிஎன்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கடற்படை ஆய்வு-2022 நிகழ்ச்சியில் இன்று (பிப்ரவரி 21, 2022) பேசிய அவர், உலகளாவிய வர்த்தகத்தின் பெரும்பகுதி இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தின் ஊடாகவே பயணிப்பதாக தெரிவித்தார். நமது வர்த்தகம் மற்றும் எரிசக்தி தேவைகளில் கணிசமான பகுதி கடல் வழியாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே, கடல்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. இந்திய கடற்படையின் தொடர்ச்சியான கண்காணிப்பு, சரியான எதிர்வினை மற்றும் அயராத முயற்சிகள் ஆகியவை இந்த விஷயத்தில் மிகவும் வெற்றிகரமாக உள்ளன.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது, ‘மிஷன் சாகர்மற்றும் சமுத்திர சேதுஆகியவற்றின் கீழ் உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரை வெளியேற்றுவதன் மூலமும் மருந்துகளை வழங்குவதன் மூலமும் நட்பு நாடுகளுக்கு இந்திய கடற்படை உதவிகளை வழங்கி வருவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

 

நெருக்கடி காலங்களில் இந்தியக் கடற்படையின் விரைவான மற்றும் திறமையான நிலைப்பாடு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் 'விருப்பமான பாதுகாப்பு கூட்டாளி' மற்றும் 'முதல் பதிலளிப்பவர்' என்ற இந்தியாவின் பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

விசாகப்பட்டினத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், பல நூற்றாண்டுகளாக முக்கியமான துறைமுகமாக இது இருந்து வருவதாகக் கூறினார். இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவின் தலைமையகம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளதன் மூலம் அதன் முக்கியத்துவம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

1971 போரின் போது விசாகப்பட்டினம் சிறந்த பங்களிப்பை வழங்கியதாக அவர் கூறினார். அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் கடற்படை முற்றுகை மற்றும் பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலான காஜிமூழ்கடிக்கப்பட்டதில் கிழக்கு கடற்படை பிரிவின் வீரச் செயலை அவர் நினைவு கூர்ந்தார். பாகிஸ்தானுக்கு அது ஒரு பெரிய பின்னடைவு ஆகும் என்றார் அவர். 1971-ம் ஆண்டு யுத்தம் நமது வரலாற்றில் மிக அழுத்தமான வெற்றிகளில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்தியக் கடற்படை அதிகளவில் தன்னிறைவு அடைந்து வருவதையும், ‘மேக் இன் இந்தியாமுயற்சியில் முன்னணியில் இருப்பதையும் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பெருந்தொற்றின் அனைத்து சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, கடற்படை ஆய்வை சிறப்பாக நடத்தியதற்காக இந்திய கடற்படைக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800028



(Release ID: 1800068) Visitor Counter : 247