பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மண்டல சமச்சீர் வளர்ச்சிக்கு கடினமான பகுதிகளின் வளர்ச்சி அவசியம்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 20 FEB 2022 7:25PM by PIB Chennai

மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) அறிவியல் & தொழில்நுட்பம்புவி அறிவியல்; பிரதமர் அலுவலகம்மத்திய இணை அமைச்சர்  பணியாளர்கள், பொது மக்கள் குறை தீர்ப்பு , ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி, டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் அதிகார வரம்பில் வளர்ச்சிக்கான முன்னுரிமைப் பகுதிகளை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். . உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்களுக்குப் பொறுப்பு பொறுப்பெற்று , பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை எடுத்துரைப்பதில்  மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே பாலமாகச் செயல்படும் முக்கியப் பங்கினை ஆற்றுவதாகவும் அவர் கூறினார். இன்று ஜம்முவின் மாநாட்டு மையத்தில்  ரம்பன் மாவட்டத்திற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (திஷா) கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசுகையில்  அவர் இவ்வாறு கூறினார்.

 தோடா மற்றும் ரியாசி மாவட்டங்களைப் போன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலம்  லாவெண்டர் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் ரம்பன் மாவட்டத்தில் ஊதா புரட்சியை தொடங்குவது என்ற முக்கிய முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.   தோடா மற்றும் ரம்பன் ஆகிய பகுதிகளில் உகந்த காலநிலை மற்றும் புவியியல் நிலைமைகள் இருப்பதால், மாவட்ட இளைஞர்களுக்கு வருமான ஆதாரங்களை அதிகரிக்க லாவெண்டர் சாகுபடியைத் தொடங்கலாம் என்று டாக்டர் சிங் அறிவித்தார்.

 பல்வேறு மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பெரிய பொது நலனுக்காக பல்வேறு வளர்ச்சிப் பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்பட திஷா தளம் வாய்ப்பளித்ததாகக்  டாக்டர் சிங் குறிப்பிட்டார்.

ராம்பன் மாவட்டத்தின் பல்வேறு அணுக முடியாத பஞ்சாயத்துகள் மற்றும் தொகுதிகளின் பிஆர்ஐ உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பல்வேறு ஆலோசனைகளைக் கேட்ட டாக்டர் சிங், மாவட்டம் மோசமான  நிலப்பரப்பைக் கொண்டிருப்பதாகக் கூறினார். எவ்வாறாயினும், சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின்  திட்டங்களின் பயனை ஜம்மு & காஷ்மீரின் தொலைதூர பஞ்சாயத்துகள் மற்றும் ராம்பன் தொகுதிகள் மற்றும் பிற கடினமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் கிசான் நிதி, ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள திட்டங்கள் போன்ற திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பி ஆர்  ஐ  உறுப்பினர்களின் முயற்சிகளை டாக்டர் சிங் பாராட்டினார். பல்வேறு துறைகளின் அதிகாரிகளை இந்த  உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தரமான நடவடிக்கை முறைகளை உருவாக்கவும் வலியுறுத்தினார்.


(Release ID: 1799906) Visitor Counter : 255