எஃகுத்துறை அமைச்சகம்
கேஐஓசிஎல் நிறுவனத்தில் நிலக்கரி உலைக்கு மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் அடிக்கல்
Posted On:
20 FEB 2022 4:53PM by PIB Chennai
பணம்பூர் மங்களூரில் உள்ள குத்ரேமுக் இரும்புத்தாது நிறுவனத்தில் (KIOCL), நிலக்கரி உலைக்கு மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் இன்று அடிக்கல் நாட்டினார்.
ரூ.836 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த உலை 24 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் பேசிய கேஐஓசிஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு டி சாமிநாதன், மத்திய எஃகுத் துறை அமைச்சகத்தின் ஆதரவு மூலம், பொதுத்துறை நிறுவனமான கேஐஓசிஎல் திறம்படச் செயல்பட்டு, சுரங்கம் மற்றும் இரும்பு வார்ப்புத் தொழிலில் தனது முந்தைய பொலிவைப் பெறும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் எஃகுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு டி.ஸ்ரீனிவாஸ், நிதித்துறை இயக்குனர் எஸ்.கே.கோராய், உற்பத்தி மற்றும் திட்டங்கள் துறை இயக்குனர் திரு கே.வி.பாஸ்கர ரெட்டி மற்றும் கேஐஓசிஎல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குத்ரேமுக் இரும்புத்தாது நிறுவனம், லக்யா அணை ஆகியபகுதிகளில், கேஐஓசிஎல் நிறுவனம் மேற்கொள்ளும் காடு வளர்ப்பு பணிகளையும் மத்திய அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் நாளை பார்வையிடுகிறார்.
(Release ID: 1799856)
Visitor Counter : 189