கலாசாரத்துறை அமைச்சகம்
பழங்குடியினரின் மிகப்பெரிய கண்காட்சியான மேடாரம் ஜாதரா பாரம்பரிய உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்பட்டது.
Posted On:
20 FEB 2022 2:02PM by PIB Chennai
நான்கு நாட்கள் நடைபெற்ற நாட்டின் மிகப் பெரிய பழங்குடியினர் திருவிழாவான சம்மக்கா சாரலம்மா மேடராம் ஜாதாரா, பாரம்பரிய உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கொண்டாடப்பட்டு நேற்றுடன் நிறைவடைந்தது. இது பழங்குடியின சமூகங்களின் மிகப்பெரிய கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த விழா இந்த ஆண்டு தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள மேடராம் கிராமத்தில் பிப்ரவரி 16-ம் தேதி , ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் கோலாகலமாகத் தொடங்கியது. பழங்கால முறைப்படி, சிலகலகுட்டா வனப்பகுதியிலும், மேடாரம் கிராமத்திலும் பழங்குடியின பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பக்தர்கள் குலதெய்வங்களுக்கு வெல்லம் சாற்றுவதற்காக வெறுங்காலுடன் சுற்றி வந்து , அம்மனை வழிபட்டனர்.
வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, சம்மக்கா-சாரலம்மா 'மேடாரம் ஜாதரா'விற்கு வருகை தந்து, சம்மக்கா மற்றும் சாரலம்மா தெய்வங்களைப் பிரார்த்தனை செய்தார். மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங்கும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
அவரது வருகையின் போது, திரு ஜி கிஷன் ரெட்டி, பாரம்பரிய முறைப்படி, அவரது எடைக்கு நிகரான 'தங்கம்' (பங்காரம்) என்று பிரபலமாக அறியப்படும் வெல்லத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்திய மக்களுக்காக சம்மக்கா மற்றும் சாரலம்மா தெய்வங்களின் பரிபூரண ஆசிகளை வேண்டுவதாகத் தெரிவித்தார். இந்தத் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் கூட்டம் நாட்டின் கலாச்சார விழுமியங்களையும் நெறிமுறைகளையும் எடுத்துக்காட்டுகிறது. சம்மக்கா மற்றும் சாரக்காவின் வாழ்க்கையும் அநீதிகள் மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான அவர்களின் போராட்டமும் உத்வேகம் அளிப்பதுடன், அனைவரும் தொடர்ந்து பின்பற்றத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799812
(Release ID: 1799829)
Visitor Counter : 206