விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் கொள்கைகளைக் கொண்டு எக்ஸ்போ 2020 துபாயில் பயனடையுமாறு விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இந்தியா அழைப்பு

Posted On: 18 FEB 2022 1:49PM by PIB Chennai

விவசாயம் மற்றும் தொடர்புடைய துறைகளில் நாட்டின் முதலீட்டுக்கு உகந்த கொள்கைகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை எக்ஸ்போ 2020 துபாய் கண்காட்சி வெளிப்படுத்தும். இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர்.அபிலக்ஷ் லிகி, ஸ்டார்ட்அப் மற்றும் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

அவர்களின் முன்மொழிவுகளை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்குமாறு கூறிய , டாக்டர். லிக்கி மானியங்கள், மேலாண்மை செலவுகள் மற்றும் பிற ஆதரவு நடவடிக்கைகளை வழங்குவதற்கு அவை பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 

 

மேலும்  டாக்டர். லிக்கி கூறுகையில், “சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பலனளிக்க வேண்டும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும் என்பதே எக்ஸ்போ 2020-வில் நாங்கள் பங்கேற்பதன் முதன்மை நோக்கம்,” என்றார்.

 

பொதுவாக அறியப்பட்ட ஒன்பது தினை வகைகளையும் இந்தியா உற்பத்தி செய்வதோடு மற்றும் உலகளவில் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் மற்றும் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் இந்தியாவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஐநா பொதுச் சபை சமீபத்தில் ஏற்றுக்கொண்டது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799247

                                                                                                *****************

 



(Release ID: 1799347) Visitor Counter : 213