குடியரசுத் தலைவர் செயலகம்
நான்கு நாடுகளின் தூதர்களுக்கான நியமனப் பத்திரங்களை குடியரசுத் தலைவர் பெற்றுக் கொண்டார்
Posted On:
16 FEB 2022 1:31PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (16.02.2022) இந்தியாவுக்கான தான்சானியா, ட்ஜிபோத்தி, செர்பியா மற்றும் வடமாசிடோனியா நாடுகளின் தூதர்களின் நியமனப் பத்தி்ரங்களை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பெற்றுக் கொண்டார். இன்று நியமனப் பத்திரங்களை வழங்கியவர்கள் விவரம் வருமாறு:
1) திருமதி அனிஷா கே பெகா, ஹைகமிஷனர் ஐக்கிய தான்சானியா குடியரசு
2) திரு இசே அப்தில்லாஹி அசோவே, ட்ஜிபோத்தி குடியரசின் தூதர்
3) திரு சினிசா பெவிக், செர்பியா குடியரசின் தூதர்
4) திரு ஸ்லோபோடான் உசுனோவ், வடமாசிடோனியா குடியரசின் தூதர்
நியமனப் பத்திரங்களை வழங்கிய பிறகு நான்கு புதிய தூதர்களுடனும் குடியரசுத் தலைவர் தனித்தனியாக கலந்துரையாடினார். மேலும் புதிய தூதர்களாக நியமிக்கப்பட்டிருப்பதற்காக அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், அந்த நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவை சுட்டிக்காட்டியதுடன், புதிய தூதர்களுடனான பன்முக உறவையும் எடுத்துரைத்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் சில புதிய தூதர்களின் பணி வெற்றியடையவும் அவர்கள் ஆரோக்கியமாக வாழவும் வாழ்த்துத் தெரிவித்தார்.
புதிய தூதர்கள் மூலம் அந்தந்த நாடுகளின் தலைவர்ளுக்கு தமது நல்வாழ்த்துகளையும் குடியரசுத் தலைவர் தெரிவித்துக் கொண்டார். அப்போது பேசிய புதிய தூதர்கள் இந்தியாவுடனான தங்களது நாடுகளின் நட்புறவை வலுப்படுத்த மேலும் நேரில் நெருக்கமாக பணியாற்ற உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
***************
(Release ID: 1798746)
Visitor Counter : 247