சுரங்கங்கள் அமைச்சகம்

ஏப்ரல் – டிசம்பர் 2021-22-ல் தாதுப்பொருட்கள் உற்பத்தி ஒட்டுமொத்தமாக 16 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

Posted On: 16 FEB 2022 11:53AM by PIB Chennai

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல்-டிசம்பர் 2021-22-ல் தாதுப்பொருட்கள் உற்பத்தி ஒட்டுமொத்தமாக 16 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக இந்திய சுரங்க அமைப்பின் தற்காலிக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2021 டிசம்பர் மாதத்தில் சுரங்கங்களில் தாதுப்பொருட்கள் வெட்டி எடுக்கும் பணி மற்றும் உற்பத்திக் குறியீடு (அடிப்படை:2011-12=100) 120.3 என்ற அளவில் உள்ளது. இது 2020 டிசம்பர் அளவுடன் ஒப்பிடுகையில், 2.6% அதிகமாகும்.

டிசம்பர் 2021-ல் முக்கியமான தாதுப்பொருட்களின் உற்பத்தி அளவு; நிலக்கரி 748 லட்சம் டன், லிக்னைட் – 39 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2814 மில்லியன் கனமீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், பாக்ஸைட் 2,492 ஆயிரம் டன், குரோமைட் – 384 ஆயிரம் டன், தாமிரம் – 10 ஆயிரம் டன், தங்கம் – 106 கிலோ, இரும்புத்தாது-209 லட்சம் டன், அடர் காரீயம் – 28 ஆயிரம் டன், மாங்கனீசு தாது – 273 ஆயிரம் டன், அடர் துத்தநாகம் – 126 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் – 309 லட்சம் டன், பாஸ்போரைட் – 110 ஆயிரம் டன், மேக்னஸைட் -11 ஆயிரம் டன்  மற்றும் வைரம் -70 காரட்.

கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798689

------



(Release ID: 1798740) Visitor Counter : 265