தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கோவிட்-19 நிவாரண திட்டத்தின் கீழ் இதுவரை 12,309 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி வழங்கியது இஎஸ்ஐசி
Posted On:
15 FEB 2022 7:24PM by PIB Chennai
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என இஎஸ்ஐசி / இஎஸ்ஐஎஸ் மருத்துவமனைகளுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம்(இஎஸ்ஐசி) அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் இறந்த, காப்பீடு செய்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உதவ கோவிட்-19 நிவாரண திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இஎஸ்ஐசி நிறுவனம் தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ், காப்பீடு செய்த இறந்த தொழிலாளியின் சராசரி சம்பளத்தில், 90 சதவீதம் தகுதியான வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள, இத்திட்டம் 2022 மார்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். ஆனால் தற்போதுள்ள அனைத்தும் பயனாளிகளுக்கும் பயன்கள் தொடரும். அதற்கு முன், களஅலுவலகங்களின் கருத்துக்கள் உட்பட சில கூடுதல் அம்சங்கள் ஆய்வு செய்யப்படும். பயனாளிகளைச் சார்ந்தவர்கள் 12,309 பேருக்கு நிவாரண தொகை ரூ.34.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர கோவிட் தொற்று நிலவரத்தை சமாளிக்க பல நடவடிக்கைகளை இஎஸ்ஐசி எடுத்துள்ளது. ஒவ்வொரு இஎஸ்ஐசி மருத்துவமனையில் உள்ள 20 சதவீத படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவிட் இரண்டாம் அலையின் போது, 33 இஎஸ்ஐசி மருத்துவமனைகள் 4,500 படுக்கைகள் மற்றும் 400 வென்டிலேட்டர்களுடன் கோவிட் பிரத்யேக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப 50 மருத்துவமனைகளை, கோவிட் பிரத்யேக மருத்துவமனைகளாக மாற்றவும் இஎஸ்ஐசி தயாராக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798576
************************
(Release ID: 1798623)
Visitor Counter : 240