பாதுகாப்பு அமைச்சகம்

சவுதி அரேபிய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஃபகத் பின் அப்துல்லா முகமது அல்-முதைர் இந்தியா வருகை

Posted On: 15 FEB 2022 5:21PM by PIB Chennai

சவுதி அரேபிய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஃபகத் பின் அப்துல்லா முகமது அல்-முதைர்  நேற்று இந்தியா வந்தார். சவுதி ராணுவ தளபதி இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இது இந்தியா-சவுதி இடையே இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதை குறிக்கிறது. இந்திய ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம் .நரவாணே, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.  இருநாடுகள் இடையேயான  இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை  வலுப்படுத்த அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

 

இதையடுத்து இந்தியா வந்துள்ள சவுதி ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஃபகத் பின் அப்துல்லா முகமது அல்-முதைர்- ஐஇந்திய ராணுவ தளபதி  ஜெனரல் எம்.எம்.நரவாணே, தில்லி சவுத் பிளாக்கில் இன்று வரவேற்றார். சவுதி ராணுவ தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின் இருவரும் இருதரப்பு ராணுவ உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.  பாதுகாப்பு அம்சங்கள்  குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

 

பொருளாதாரம், தீவிரவாத ஒழிப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பை குறைப்பது போன்ற துறைகளில் இந்தியா-சவுதி அரேபியா இடையிலான உறவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றில் முக்கிய அம்சமாக இருநாடுகள் இடையேயான பாதுகாப்பு உறவு  உள்ளது. இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு லெப்டினன்ட் ஜெனரல் ஃபகத் பின் அப்துல்லா முகமது அல்-முதைர், நாளை சவுதி அரேபியா புறப்பட்டு செல்கிறார்.

                                                                                ************************(Release ID: 1798585) Visitor Counter : 249