கலாசாரத்துறை அமைச்சகம்

டிஜிட்டல் யுகத்தில் பொருத்தமாக இருப்பதற்கு அருங்காட்சியகங்களைப் புதுப்பிக்க மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அழைப்பு

Posted On: 15 FEB 2022 6:11PM by PIB Chennai

இந்தியாவின் அருங்காட்சியகங்களை புதுப்பிப்பது’ குறித்த முதல் வகையான உலகளாவிய இரண்டு நாள் உச்சிமாநாட்டை மத்திய கலாச்சாரம், சுற்றுலா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று தொடங்கிவைத்தார்.  இந்த  உச்சிமாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து பங்கேற்றுள்ளனர். தொடக்க நிகழ்வில் அருங்காட்சியகங்களின் சர்வதேச கவுன்சில் தலைவர் ஆல்பெர்ட்டோ கார்லின்டினி, கலாச்சார சொத்துக்கள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆய்வுக்கான சர்வதேச மையத்தின் தலைமை இயக்குநர் வெபெர் நொடோரோ, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி லில்லி பாண்டேயா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, நாடு முழுவதும் தற்போதுள்ள அருங்காட்சியகங்களை  மேம்படுத்த மற்ற அமைச்சகங்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார். “விடுதலைப் போராட்டத்தில் பழங்குடி வீரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பத்து அருங்காட்சியகங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மேலும், ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்கள் அருங்காட்சியகம், பாதுகாப்பு அருங்காட்சியகம், ரயில்வே அருங்காட்சியகம் போன்ற தனித்துவமான அமைச்சகங்களும் அமைக்கப்பட்டுள்ளன” என்று  அவர் கூறினார். அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக 18 அறிவியல் அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இந்திய  தொல்லியல் ஆய்வுத் துறை நாடு முழுவதும் 52 அருங்காட்சியகங்கைள நடத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு கிஷன் ரெட்டி, “களவாடப்பட்ட அல்லது எடுத்துச் செல்லப்பட்ட பாரம்பரிய பொருட்களின் 95 சதவீதம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு திரும்ப கொண்டுவரப்பட்டுள்ளன. 1976-க்கு பின் கொண்டுவரப்பட்ட 212 பாரம்பரிய பொருட்களில், 2014-க்குப் பின் கொண்டுவரப்பட்டவை 199” என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798527

***************



(Release ID: 1798583) Visitor Counter : 185