அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஸ்வமிதா திட்டத்தின் கீழ் 6 லட்சம் கிராமங்களின் வரைபடமும் 100 நகரங்களின் முப்பரிமாண வரைபடங்களும் தயாரிக்கப்படுவது இந்தியாவுக்கு மாற்றம் ஏற்படுத்துவதாக இருக்கும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 15 FEB 2022 4:48PM by PIB Chennai

மோடி அரசின் ஸ்வமிதா திட்டத்தின் கீழ் ட்ரோன்களுடன் புவிசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 6 லட்சத்துக்கும் அதிகமான இந்திய கிராமங்கள் அளவெடுக்கப்படும் என்று அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) புவிசார் அறிவியல் துறை இணை  அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார். அதே சமயம் 100 இந்திய நகரங்களுக்கு முப்பரிமாண வரைபடங்கள் தயாரிக்கப்படும் என்றும் இது மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

புவிசார்ந்த தரவுகள் வெளியீட்டின் முதலாவது ஆண்டினைக் குறிக்கும் நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்று பேசிய அமைச்சர், புவிசார் நடைமுறைகள், ட்ரோன் கொள்கை, திறக்கப்பட்ட விண்வெளித்துறை ஆகியவை இந்தியாவின் எதிர்கால பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக இருக்கும் என்றார். 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற தொலைநோக்கு திட்டத்தை எட்டுவதற்கு இத்தகைய உத்திகள் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

ஓராண்டுக் காலத்திற்குள் தாராளமய வழிகாட்டுதல்கள் மிகவம் ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும் நிலையைில், புவியியல் சார்ந்த கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 

அடிப்படைக் கட்டமைப்பு, பொருள் உற்பத்தி, சுகாதாரம், வேளாண்மை, நகர்ப்புற திட்டமிடல், நெடுஞ்சாலைகள், சேவை வழங்குதல்  போன்ற பன்முகத் துறைகளில் செயல்படுத்துவதற்கான  நாட்டின்  “டிஜிட்டல் கரன்சியாக” புவிசார்ந்த தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்று அவர் கூறினார். தொழில்துறை மதிப்பீட்டின்படி, 2070-ல் இந்திய புவிசார்ந்த தொழில்நுட்ப சந்தை மதிப்பு ரூ.10,595 கோடி உட்பட  23,345 கோடியாக இருந்தது. 2025-ல் இது ரூ.36,300 கோடியாக அதிகரிக்கக் கூடும் என்று  டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798505

---



(Release ID: 1798543) Visitor Counter : 270