நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

ஊக்கமளிக்கும் வகையில் தொடங்கிய ஃபின்டெக் மாதம்

Posted On: 15 FEB 2022 4:00PM by PIB Chennai

பிப்ரவரி 7… 2022 முதல் தொடங்கிய ஃபின்டெக் ஓப்பன் மாதம் என்பதுகட்டுப்பாட்டாளர்கள்ஃபின்டெக் எனப்படும் நிதி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள்தொழில்துறை தலைவர்கள்ஸ்டார்ட்-அப் சமூகம் மற்றும் டெவலப்பர்கள் ஆகியோரை பொதுவான தளத்தில் ஒன்றிணைத்துயோசனைகளை பரிமாறிக்கொள்ளும் முன்மாதிரியான மற்றும் புதுமையான முயற்சியாகும். 

ஆழ்ந்த கற்றல் அனுபவத்தை உருவாக்கும் நோக்கத்தோடு  ஃபின்டெக்  ஓப்பன் மாதம் என்ற தலையாய கருப்பொருள் மூன்று முக்கிய முன்னுரிமைகளை கொண்டுள்ளது.

ஃபின்டெக் தொழில்துறை முழுவதும் திறந்த சூழலியல் அமைப்பை ஊக்குவிப்பதுகண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதுநிதி உள்ளடக்கலை உறுதிசெய்துகணக்கு திரட்டி போன்ற புதிய அமைப்புகளைப் பயன்படுத்திஃபின்டெக் கண்டுபிடிப்புகளின் அடுத்த அலையைக் கட்டவிழ்த்துவிடுதல் ஆகியவையாகும்.

ஆழ்ந்த விவாதங்கள்புதுமைகளை ஊக்குவித்தல்பல்வேறு கருத்துகளை வெளிக்கொணர்தல் ஆகியவை ஃபின்டெக் மாதத்தின் முதல் வாரத்தின் நோக்கங்கள் ஆகும்.

 

ஃபின்டெக் மாதத்தை 7 பிப்ரவரி 2022 அன்று காணொலி மூலம் மத்திய அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். நிதி ஆயோக் துணைத்தலைவர் டாக்டர். ராஜீவ் குமார் சிறப்புரை ஆற்றினார். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ்சுகாதார சேவைகள்சரக்கு போக்குவரத்து மற்றும் இதர பிரிவுகளுக்கு கோவின்யூபிஐ போன்ற திறந்த தளங்களை உருவாக்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்,” என்றார்.

 

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798495

                                                                                                ***********************

 


(Release ID: 1798535) Visitor Counter : 208


Read this release in: English , Urdu , Hindi , Bengali