சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் சீர்மரபினர் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டத்தை தொடங்குகிறது
Posted On:
15 FEB 2022 2:16PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திரகுமார், சீர்மரபினர் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டத்தை பிப்ரவரி 16-ந் தேதி புதன் கிழமை காலை 7 மணியளவில், புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடங்கிவைக்கிறார். இந்த திட்டம் சீர்மரபினர், நாடோடிகள் நலனுக்கானதாகும்.
சீர்மரபினர், நாடோடிகள், நாடோடி பழங்குடியினர் ஆகியோர் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட நலிவடைந்த சமுதாயத்தினராவார்கள். இவர்களில் பெரும்பாலோர் பல தலைமுறைகளாக ஆதரவற்ற நிலையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஷெட்யூல்டு மற்றும் பழங்குடியினருக்கு கிடைத்து வரும் பலன்கள் எதுவும் கிடைக்காமல் நிலையற்ற எதிர்காலமின்றி வாழ்ந்து வரும் இந்த சமுதாயத்தினரின் நலனுக்கான இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்தகைய சமுதாயத்தினருக்கு சொந்தமாக நிலமோ, வீடோ இருப்பதில்லை. தங்களது வாழ்வாதாரத்திற்கு காடுகளையே இவர்கள் பெரும்பாலும் நம்பியுள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் மாற்றங்கள் இந்த சமுதாயத்தினரின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்பதை கருத்தில் கொண்டு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் 2014, ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் சீர்மரபினர் மற்றும் நாடோடிகளுக்கான தேசிய ஆணையத்தை மூன்றாண்டு காலத்திற்கு அமைத்தது. இந்த தேசிய ஆணையம் திரு பிக்கு ராம்ஜி ஐடேட் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்தது.
இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய சமூகநீதி அமைச்சகம் இந்த சமுதாயத்தினருக்கான மேம்பாடு மற்றும் நலவாரியத்தை 2019-ல் அமைத்தது.
மேலும் விரிவான விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798470
***************
(Release ID: 1798500)