ஆயுஷ்

கவுகாத்தியில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆய்வு நிலையம் மற்றும் மாநில ஆயுர்வேதக் கல்லூரியில் மூன்று கட்டிடங்களுக்கு மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அடிக்கல் நாட்டினார்

Posted On: 12 FEB 2022 6:39PM by PIB Chennai

போர்சஜையில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தில் பஞ்சகர்மா வளாகம் அமைப்பதற்கும், கவுகாத்தியின் ஜலுக்பாரியில் உள்ள மாநில ஆயுர்வேத கல்லூரியில் பஞ்சகர்மா சிறப்பு மையம் அமைப்பதற்கும் மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த மையங்களின் மதிப்பீடு ₹20 கோடி ஆகும்.

 

அசாம் அரசின் சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கேசப் மஹந்தா மற்றும் கவுகாத்தி மக்களவை உறுப்பினர் ராணி ஓஜா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

மாநில ஆயுர்வேதக் கல்லூரியில் பஞ்சகர்மாவுக்கான சிறப்பு மையம் நிறுவப்படும். ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்ஸ்வஸ்தா திட்டத்தின் கீழ் மாநில ஆயுர்வேத மருந்தகமும் மேம்படுத்தப்படும். இந்த முயற்சிகளின் மொத்த செலவு ரூ 10 கோடி ஆகும்.

 

மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள பஞ்சகர்மா வளாகம் தரை மற்றும் 2 மாடிக் கட்டிடமாகவும், மருந்தியல் மற்றும் வேதியியல் ஆய்வகங்கள் தர மற்றும் 3 மாடிக் கட்டிடமாகவும் இருக்கும். இந்த இரண்டு கட்டிடங்களுக்கும் 10 கோடி ரூபாய் செலவாகும்.

 

பஞ்சகர்மாவுக்கான புதிய கட்டிடங்கள் திறன் மேம்பாட்டிற்கான உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை வழங்க உதவும். முன் மருத்துவ பரிசோதனை நடைமுறைகள், மருந்துகள் தரநிலைப்படுத்தல், மூலிகைகள் தொடர்பான இரசாயணச்  சோதனை, விலங்குகள் தொடர்பான நச்சுயியல் அறிக்கை போன்றவற்றுக்கு மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மருந்தியல் மற்றும் வேதியியல் கட்டிடம் உதவும். வடகிழக்கில் இது போன்ற வசதி அமைவது இதுவே முதல் முறை ஆகும்.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்தா சோனோவால், “உடல் வலிமை மற்றும் மன மகிழ்ச்சிக்கு ஆயுர்வேதம் உந்து சக்தியாக உள்ளது. ஆயுர்வேதத்தில் மிகப்பெரிய திறனை வெளிப்படுத்தக்கூடிய வளமான தாவரங்களை அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு முழுவதிலும் ஆய்தரித்ரி எங்களுக்கு வழங்கியிருப்பது நாங்கள் செய்த அதிர்ஷ்டம். இந்த முன்முயற்சிகள் ஆயுர்வேதத்தை மேம்படுத்துவதற்கும்  மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குமான வாய்ப்பு  வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரிய இந்திய மருத்துவ முறையின் பெருமை மிகு  பஞ்சகர்மாவில் நமது திறனை இவை மேம்படுத்தும்,” என்று கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797931

                                                                                                ***************

 



(Release ID: 1797948) Visitor Counter : 180