நிலக்கரி அமைச்சகம்

மின்சாரம் அல்லாத துறைக்கு வழங்குவதற்காக போதிய நிலக்கரி இருப்பை இந்திய நிலக்கரி நிறுவனம் வைத்துள்ளது

Posted On: 12 FEB 2022 12:58PM by PIB Chennai

இந்திய நிலக்கரி நிறுவனம் மின்சாரம் அல்லாத துறைக்கு நாள்தோறும் சராசரியாக 3.4 லட்சம் டன் நிலக்கரியை வழங்கி  வருகிறது.  2021-22 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாதங்களில் 101.7 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி வழங்கப் பட்டுள்ளது.  இது 2020-21 ஆம் ஆண்டை விட 8.2 சதவீதம் அதிகமாகும்.  அந்த ஆண்டில் இதே கால கட்டத்தில்  94 மில்லியன் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டது.

இக்காலக் கட்டத்தில் மின்துறை நிறுவனங்களை விட அதிக அளவு நிலக்கரி, மின்சாரம் அல்லாத துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.  2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 105 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது.  2021-22 ஆம் ஆண்டு இதே கால கட்டத்தை விட, இது 3 மில்லியன் டன் அதிகமாகும். 

***************



(Release ID: 1797878) Visitor Counter : 152