பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பட்டய கணக்காளர்கள் நாட்டுக் கணக்கின் மனசாட்சி காவலர்கள் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 FEB 2022 4:49PM by PIB Chennai
பட்டய கணக்காளர்கள் நாட்டுக் கணக்கின் மனசாட்சி காவலர்கள் என்பதால், பொதுவாக நாட்டின் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக நாட்டின் நிதி சார்ந்த ஆரோக்கியத்திற்கு அவர்களின் நேர்மையான மனசாட்சி மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகத்தின் வருடாந்திர விருது வழங்கும் நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அவர், நாட்டின் பல்வேறு பெருநிறுவனங்கள், பொதுத்துறை, தனியார் துறை, நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த நிதி சார்ந்த தகவல்களை ஆவணம் ஆக்குவதிலும், சர்வதேச சூழல் மற்றும் சமூக செயல்பாடுகளை ஆவணம் ஆக்குவதிலும், சிறந்து விளங்கியோருக்கு விருதுகளை வழங்கினார்.
“வணிகம் செய்வதை எளிதாக்குதல்” என்பதற்கும், உலகளாவிய சிறப்பு தன்மைகளுடன் பொருந்துவதாக இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் பல முக்கியமான நடவடிக்கைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகம் செய்திருப்பது பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இத்தகைய தருணத்தில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகத்தின் பங்கு வரும் ஆண்டுகளில் மிகவும் முக்கியமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிதிசார்ந்த சந்தைகளில் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு நிதி சார்ந்த தகவல்களை ஆவணம் ஆக்குவது முக்கியமானதாகும். ஏனெனில், ஆண்டுதோறும் வெளியிடப்படும் அறிக்கைகள் மூலம் தெளிவான பாகுபாடற்ற தகவலை அது வழங்குகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இதன்காரணமாக, தேசத்தின் வருவாய் மற்றும் இதர விஷயங்களை கணக்கிடுவதற்கான அடித்தளமாக இருப்பதால், தேவைப்படும் நிதி ஆதாரங்களை அரசுக்கும், அதன் முகமைகளுக்கும் ஒதுக்கீடு செய்ய இது உதவுகிறது என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், பெருநிறுவன நிர்வாக வெளிப்பாடு போட்டிக்கான வருடாந்திர சார்க் விருதுகளையும் டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797624
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1797740)
வருகையாளர் எண்ணிக்கை : 158