நித்தி ஆயோக்

அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நித்தி ஆயோக், யுஎன்டிபி இந்தியா ஆகியவை கூட்டு முயற்சியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளன

Posted On: 11 FEB 2022 3:51PM by PIB Chennai

“அறிவியலில் மகளிர் மற்றும், இளம் பெண்களின் சர்வதேச தினத்தை” குறிக்கும் வகையில் அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நித்தி ஆயோக், யுஎன்டிபி இந்தியா ஆகியவை கூட்டு முயற்சியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆய்வு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கின. 

சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுகள் அடிப்படையில் நீடித்த வளர்ச்சி குறித்து, கவனம் செலுத்தும் தங்களின் தொழில்துறையை நிறுவ, இளைஞர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

கூட்டு முயற்சியில் புதிய கண்டுபிடிப்பாளர்களின் சமூகப்  பொருளாதாரப் பின்னணியை கருதாமல், ஓராண்டு காலத்திற்கு இந்த உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.  செயல்பாட்டு வசதிகள், இணைந்து பணியாற்றுவதற்கான இடம், பரிசோதனைக் கூடங்கள், ஆற்றல்மிக்க வணிக தொடர்புகள் போன்றவற்றுக்கு பொருத்தமான ஆதாரங்களை வழங்குவதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகளில் இளைஞர்களை இந்த திட்டம் வளர்த்தெடுக்கும். 

இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், அதிகப்படியான பொறுமையும், ஆர்வமும் தேவைப்படும் கூட்டு முயற்சியிலான புதிய கண்டுபிடிப்பு திட்டங்களுடன் தொடர்புடைய அனைவரும் இதனை மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த திட்டத்தை நித்தி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் கான் தொடங்கி வைத்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797605

***************



(Release ID: 1797660) Visitor Counter : 187