ஜவுளித்துறை அமைச்சகம்
அடையாளம் காணப்பட்ட கைவினைஞர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ 1000 அதிகமாகச் சம்பாதிப்பதை உறுதிசெய்யும் வகையில் இணைந்து பணியாற்றுமாறு வடிவமைப்பாளர்களுக்கு திரு பியூஷ் கோயல் வேண்டுகோள்
Posted On:
11 FEB 2022 1:21PM by PIB Chennai
நமது நாட்டின் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றிய வடிவமைப்பாளர்களுடனான சந்திப்புக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர், திரு பியூஷ் கோயல் தலைமை தாங்கினார்.
ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திரு யூ பி சிங் மற்றும் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐஎஃப்டி) தலைமை இயக்குநர் திரு சாந்தமானு ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளில் குறிப்பிடத்தக்க அனுபவமுள்ள என்ஐஎஃப்டியின் புகழ்பெற்ற 27 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்திய கைவினைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்ட சில மூத்த வடிவமைப்பாளர்களும் பங்கேற்றனர்.
வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கிடையேயான ஒத்துழைப்பைப் பற்றியும், தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளின் தலையீடுகள் மூலம் எவ்வாறு கைவினைப்பொருட்களின் அளவை அதிகரிக்கலாம் என்பது பற்றியும் விவாதிப்பதே கூட்டத்தின் நோக்கமாகும். கைவினை மற்றும் கைவினைக் கலைஞர்களின் பாதுகாப்பு, கைவினைப்பொருட்களின் வாழ்வாதாரம் ஆகியவை வடிவமைப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் ஆகும்.
வடிவமைப்பாளர்களை பாராட்டிய திரு கோயல், ஒரு தேசத்தின் கலை, கைவினை, கலாச்சாரம், பாரம்பரியம் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் நன்கு ஆராயப்பட்டு, முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்று வடிவமைப்பாளர்களுக்கு அவர் உறுதியளித்தார். வாரத்தில் ஒரு நாள் காதி/கைத்தறி அணிய வேண்டும் என்ற எண்ணமும், தேசத்தின் மீது பெருமை கொண்ட வடிவமைப்பாளர்களின் உணர்வும் பாராட்டப்பட்டது.
அடையாளம் காணப்பட்ட கைவினைஞர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ 1000 அதிகமாகச் சம்பாதிப்பதை உறுதிசெய்யும் வகையில் இணைந்து பணியாற்றுமாறு வடிவமைப்பாளர்களுக்கு திரு பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1797555
(Release ID: 1797622)