ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விஸ்டாடம் எனும் புறக்காட்சி ரசிப்புக்கான ரயில்களில் நிலை

இடுகை இடப்பட்ட நாள்: 11 FEB 2022 2:44PM by PIB Chennai

மத்திய ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே, வடகிழக்கு எல்லைப் பகுதி ரயில்வே, மேற்கத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, வடகிழக்கு ரயில்வே ஆகிய மண்டலங்களில் தற்போது 45 விஸ்டாடம் எனும் புறக்காட்சி ரசிப்புக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

அழகான இயற்கைக் காட்சியின் அடிப்படையில் இந்த  வகை ரயில் போக்குவரத்துக்கான வழித்தடம் தெரிவு செய்யப்படுகிறது.  மேலும், விஸ்டாடம் ரயில் பெட்டிகளின் இருப்பு இவற்றை இயக்குவதற்கான சாத்தியக் கூறு, பகல் நேர பயணம், பயணிகளின் தேவை ஆகியவற்றின் அடிப்படையிலும், இந்த வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும்  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று  மாநிலங்களவையில் கேள்வி  ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்தார்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1797615) வருகையாளர் எண்ணிக்கை : 672
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali