ரெயில்வே அமைச்சகம்
இந்தியாவுக்கான தேசிய ரயில் திட்டம்-2030
Posted On:
11 FEB 2022 2:45PM by PIB Chennai
இந்தியாவுக்கான தேசிய ரயில் திட்டம்-2030-ஐ இந்திய ரயில்வே தயாரித்துள்ளது. 2030- ஆம் ஆண்டுக்குள் எதிர்காலத்திற்கு தேவையான ரயில்வே நடைமுறையை உருவாக்குவதே இத்திட்டமாகும். இயக்கத்திறன், வணிக கொள்கை முன் முயற்சிகள் குறித்த உத்திகளை வகுப்பதே தேசிய ரயில் திட்டத்தின் நோக்கமாகும். சரக்குப் போக்குவரத்தை 45 சதவீதமாக அதிகரிப்பதும், தேவைக்கு ஏற்ப செயல் திறனை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இத்திட்டங்களை எட்டுவதற்கு பொது, தனியார் கூட்டு முயற்சி உள்பட அனைத்து விதமான நிதி மாதிரிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய ரயில்வே நாட்டின் வளர்ச்சி எந்திரமாக செயல்படுவதால் ரயில்வேயை மேலும் செயல் திறன் வாய்ந்ததாகவும், நவீனத்துவம் மிக்க பசுமை போக்குவரத்தாக மாற்றுவதும், தேசிய ரயில் திட்டத்தின் நோக்கமாகும். மேலும் ரயில் பயணத்தை குறைந்த கட்டணத்திலும் பாதுகாப்பான வழியிலும் மேற்கொள்ளவும் இது வழிவகுக்கும்.
சரக்குப் போக்குவரத்து நேரத்தை குறைத்தல், 100 சதவீத மின்மயமாக்கல், போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்கலில் ரயில் பாதைகளை அதிகரித்தல், தில்லி-ஹவுரா, தில்லி- மும்பை போன்ற முக்கியமான வழித்தடங்கலில் ரயிலின் வேகத்தை அதிகரித்தல். பிரத்யேக சரக்கு வழித்தடங்களை அடையாளம் காணுதல், அதி விரைவு ரயில் தடங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை தேசிய ரயில் திட்டம் உள்ளடக்கி உள்ளது.
மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விரிவான தகவலுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797575
***************
(Release ID: 1797599)
Visitor Counter : 453