உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம்

Posted On: 11 FEB 2022 12:39PM by PIB Chennai

பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமைச்சகம் வகுத்துள்ளது. இந்த திட்டத்தில் 3 அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, சிறுதானியங்கள் சார்ந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், கடல்சார் உற்பத்திப் பொருட்கள் மற்றும் மொஸரெல்லா சீஸ் (பாலாடைக் கட்டி) உள்ளிட்ட சமைக்க தயார் நிலையில் உள்ள / உண்ணத் தயார் நிலையில் உள்ள 4 பெரிய உணவு உற்பத்தி பிரிவுகள், இரண்டாவதாக, முட்டைகள், கோழி இறைச்சி மற்றும் முட்டைப் பொருட்கள் உள்பட மேற்கூறிய 4 உணவு வகைகளை இயற்கையான முறையில் உற்பத்தி செய்யும் சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாகும்.

3-வது அம்சம், உற்பத்தி பொருட்களுக்கான முத்திரை மற்றும் வெளிநாட்டு சந்தைப்படுத்துதல் தொடர்பான விஷயத்தில் வலுவான இந்திய வணிக முத்திரைகளுக்கு ஊக்கமளித்தலாகும்.

இந்த திட்டத்துக்கான விதிமுறைகள் 2021 மே மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 2021 ஜூன் 24 விண்ணப்பம் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. முதல் பிரிவின் கீழ் 60 விண்ணப்பங்களும், 2-வது பிரிவின் கீழ் 12 விண்ணப்பங்களும், 3-வது பிரிவின் கீழ் 71 விண்ணப்பங்களும் அண்மையில் தேர்வு செய்யப்பட்டன.

மாநிலங்களவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

 

                                                                   ***************



(Release ID: 1797559) Visitor Counter : 164