உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவுப் பதப்படுத்தும் தொழிலில் அந்நிய நேரடி முதலீடு
Posted On:
11 FEB 2022 12:38PM by PIB Chennai
உணவுப் பதப்படுத்தும் தொழிலில் 2000-வது ஆண்டு ஏப்ரல் முதல் 2021 நவம்பர் வரை வந்துள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு 10.88 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் என மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கூறியுள்ளார்.
அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை மற்றும் தரவுகளை கவனித்து வரும் தொழில் மற்றும் உள்நாட்டு தொழில் மேம்பாடுக்கான துறை (டிபிஐஐடி) அளித்துள்ள தகவலின்படி இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறையில் முதலீடு செய்துள்ள முக்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் வருமாறு ;
பிஎஸ்ஏ இன்டர்நேஷனல், பெல்ஜியம், காட்பரி ஸ்வெப்ஸ் மொரிஷியஸ் நிறுவனம், மொரிஷியஸ், யுனிலிவர் பிஎல்சி, பிரிட்டன், ஒர்க்லா ஆசியா பசிபிக் நிறுவனம் சிங்கப்பூர், டான்ஒன் ஆசியா பசிபிக் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ரோகுட்டே ஃபிரார்ஸ், பிரான்ஸ், ரிலே பிவி, நெதர்லாந்து, பெப்சிகோ பனிமெக்ஸ் நிறுவனம், மொரிஷியஸ்.
***************
(Release ID: 1797558)
Visitor Counter : 200