உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிரிஷி உடான் 2.0 திட்டம் தமிழகம் உள்ளிட்ட 29 மாநிலங்களைச் சென்றடைந்துள்ளது

Posted On: 10 FEB 2022 3:46PM by PIB Chennai

மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்யா எம் சிந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவையில் கீழ்காணும் தகவல்களை இன்று வழங்கினார்.

விமானப் போக்குவரத்து மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் 27 அக்டோபர் 2021 அன்று கிரிஷி உடான் திட்டம் 2.0 அறிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள ஏற்பாடுகளை மேம்படுத்துவதிலும், முக்கியமாக மலைப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இருந்து விரைவில் அழுகக்கூடிய உணவுப் பொருட்களை கொண்டு செல்வதிலும் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

இந்திய சரக்குகளின் தரையிறக்கம்வாகன நிறுத்தம்  மற்றும் பாதை வழிச் செலுத்துதல்  வசதிக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை இத்திட்டத்தின் கீழ் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முழுமையாக தள்ளுபடி செய்கிறது. வடகிழக்கு, மலைப்பாங்கான மற்றும் பழங்குடியினர் பகுதியை மையமாகக் கொண்ட 25 விமான நிலையங்கள் மற்றும் பிற பகுதிகள்/பகுதிகளில் 28 விமான நிலையங்கள் மீது முதன்மை கவனம் செலுத்தப்படுகிறது.

கிருஷி உடான் திட்டம் என்பது விமானப் போக்குவரத்து அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மீன்வளத் துறை, உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம், வர்த்தகத் துறை, பழங்குடியினர் அமைச்சகம் ஆகிய எட்டு அமைச்சகங்கள்/துறைகள் ஒன்றிணைந்து செயல்படுத்தும்  திட்டமாகும்.

அந்தமான் & நிக்கோபார், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, லடாக், லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்  க்ரிஷி உடான் 2.0 திட்டத்தின் கீழ் பயன்  பெற்றுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797214

*****


(Release ID: 1797294) Visitor Counter : 367