பாதுகாப்பு அமைச்சகம்

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பள்ளிகளின் பேண்ட் இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது

Posted On: 10 FEB 2022 2:53PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளின் பேண்ட் இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பு அமைச்சகமும், கல்வி அமைச்சகமும் கூட்டாக இதற்கான முடிவை எடுத்துள்ளது. கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தலைநகர் தில்லி பிரதேச அரசுடன்  கலந்தாலோசித்து சிபிஎஸ்இ பள்ளிகளின் பேண்ட் இசைக் குழுக்களின் கால அட்டவணையைத் தயாரிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதே போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளிலிருந்து பேண்ட் இசைக்குழுவைத் தெரிவு செய்யவும் மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து அனைத்துப் பள்ளிகளையும் சிபிஎஸ்இ ஒருங்கிணைக்கும்.

தேசிய போர் நினைவுச் சின்னம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூன்றாவது ஆண்டு நெருங்கும் நிலையில், 2022 பிப்ரவரி 22 முதல் பேண்ட் இசைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் நடத்தும் தேதிகள் அமையும். 2019 பிப்ரவரி 25 அன்று தேசிய போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பள்ளி மாணவர்களிடையே தேசப்பக்தியின் மாண்புகளை வளர்த்தல், கடமைக்கு அர்ப்பணித்தல், துணிவு, தியாகம் ஆகியவை இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

********



(Release ID: 1797288) Visitor Counter : 147