தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு வாழ்வாதாரப்படி வழங்குவதற்கான பதிவு

Posted On: 10 FEB 2022 1:27PM by PIB Chennai

அரசு ஊழியர் காப்பீட்டுக் கழகத்தால் (இஎஸ்ஐசி) அமல்படுத்தப்படும் அடல் பீமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டம் காப்பீடு செய்த தொழிலாளர்கள் வேலை இழக்கும்போது அவர்களின் தகுதிக்கேற்ப வேலையின்மைக்கான உதவித் தொகையை வழங்குகிறது. அன்றாட சராசரி வருவாயில் 25 சதவீதம் என்பதிலிருந்து 50 சதவீதமாக இது உயர்த்தப்பட்டுள்ளது.

01.07.2018 அன்று அமலுக்கு வந்த இந்தத் திட்டம் பின்னர் 01.07.2020 முதல் 30.06.2021 வரையும் மீண்டும் 01.07.2021 முதல் 30.06.2022 வரையும் இரண்டு முறை நீடிக்கப்பட்டுள்ளது. 07.02.2022 நிலவரப்படி 82,724 உரிமை கோரல்கள் பெறப்பட்டன. இவற்றில் 61,314 உரிமை கோரல்கள் ஏற்கப்பட்டு ரூ.81,46,38,145 வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 7813 உரிமை கோரல்கள் பெறப்பட்டு 6637 உரிமை கோரல்கள் ஏற்கப்பட்டன. இவர்களுக்கு ரூ.8,48,19,293 வழங்கப்பட்டது. புதுச்சேரியில் 412 உரிமை கோரல்கள் பெறப்பட்டு 329 ஏற்கப்பட்டு ரூ.50,83,004 வழங்கப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக இணையமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***************



(Release ID: 1797230) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Bengali , Gujarati