எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதியாண்டு 22-ன் 3-வது கால் பகுதியில் இந்திய எஃகு ஆணையத்தின் நிகர லாபம் 12% அளவுக்கு அதிகரித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 10 FEB 2022 12:23PM by PIB Chennai

2021-22 நிதியாண்டின் 3-வது கால் பகுதியில் இந்திய எஃகு ஆணையத்தின் செயல்பாடுகளின் நிதி பயன்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி,

  • இரும்புக் குழம்பு, இரும்புப் பாளம், விற்பனைக்கான எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 3-வது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பானதாக இருந்தது.
  • கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், நிதியாண்டு 22-ன் மூன்றாவது காலாண்டில் நிகர லாபம் 12% அளவுக்கு அதிகரித்துள்ளது.
  • நிதியாண்டு 22-ன் மூன்றாவது காலாண்டில் செயல்பாடுகள் மூலமான வருவாய் 28% அதிகரித்து ரூ.25,245 ஆகியுள்ளது.
  • 31.12.2021 நிலவரப்படி கடன் பெற்ற தொகை ரூ.19,128 கோடியாகும்.

பொருளாதாரத்தில் காணப்படும் ஒட்டுமொத்த ஆக்கப்பூர்வ கண்ணோட்டம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புக்கான செலவுத் தொகையை அதிகரிக்க மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் காரணமாக வரும் காலாண்டில் இந்திய எஃகு ஆணையத்தின் செயல்பாடு மேம்பட வாய்ப்புள்ளது. கடன் பெறுவதை குறைப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இது இரண்டாவது காலாண்டில் சுமார் 15% குறைந்திருப்பதில் பிரதிபலிக்கிறது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797127

******


(வெளியீட்டு அடையாள எண்: 1797140) வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi