உள்துறை அமைச்சகம்
இணைய குற்றங்களை தடுப்பதற்கான யுக்திகள்
Posted On:
09 FEB 2022 3:33PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. அஜய் குமார் மிஷ்ரா கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி 'காவல்' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகின்றன. சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது, இணைய குற்றங்களை தடுப்பதற்கான யுக்திகள், திட்டமிடுதல், பணிக்குழுவை அமைத்தல் மற்றும் தடுப்பு, கண்டறிதல், விசாரணை மற்றும் வழக்குத் தொடர சட்ட அமலாக்க முகமைகளின் திறன் மேம்பாடு/பயிற்சி உள்ளிட்டவை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பொறுப்பாகும்.
மாநில அரசுகளின் முன்முயற்சிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மத்திய அரசு ஆதரவளிக்கிறது.
இணைய குற்றங்களை விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கையாள்வதற்கான வழிமுறைகளை வலுப்படுத்த, இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து வகையான இணைய குற்றங்கள் தொடர்பான சம்பவங்களையும் பொதுமக்கள் தெரிவிக்க, தேசிய சைபர் குற்ற தகவல் தளத்தை (www.cybercrime.gov.in) அரசு தொடங்கியுள்ளது.
இந்த இணையதளத்தில் பதிவாகும் இணைய குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதற்காக அந்தந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் சட்ட அமலாக்க அமைப்பிற்கு தானாகவே அனுப்பப்படும். கட்டணமில்லா உதவி எண்ணும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796819
********************
(Release ID: 1796943)
Visitor Counter : 421