ஜவுளித்துறை அமைச்சகம்
அரசின் இ – சந்தையில் 1,77,825 நெசவாளர்களும், கைவினைக் கலைஞர்களும் பதிவு செய்துள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
09 FEB 2022 4:22PM by PIB Chennai
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு நேரடியாகத் தங்களின் பொருட்களை விற்பதற்கு அரசின் இ – சந்தையில் மொத்தம் 1,77,825 நெசவாளர்களும், கைவினைக் கலைஞர்களும் பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் 22,380 விற்பனை மையங்கள் உள்ளன. இவற்றில் 1,77,825 நெசவாளர்களும், கைவினைக் கலைஞர்களும் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 16 மையங்களில் 18,010 பேர் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்துள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்களால் 2020 ஜூலையிலிருந்து இது நாள் வரை இ-சந்தை இணையப் பக்கத்தின் மூலமாக ரூ.118.30 கோடி விற்பனை பதிவாகி உள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி. தர்ஷணா ஜர்தோஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1796922)
வருகையாளர் எண்ணிக்கை : 197