மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பள்ளி நிலையிலான பாடநூலில் விவசாயத்தின் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன
Posted On:
09 FEB 2022 2:26PM by PIB Chennai
வேளாண்மை எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் உட்பட வேளாண்மை தொடர்பான விஷயங்கள் பல்வேறு நிலைகளில் உள்ள மாணவர்களின் பாடத் திட்டங்களில் இடம் பெற்றுள்ளன. 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை என்சிஇஆர்டி வெளியிடும் அறிவியல் பாடப் புத்தகங்களிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் உயிரியல் பாட நூல்களிலும் வேளாண்மை சம்பந்தமான பாடப்பிரிவுகள் உள்ளன.
மேலும் வேளாண்மையால் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து “இந்தியா: மக்கள் மற்றும் பொருளாதாரம்” என்ற தலைப்பில் 12 ஆம் வகுப்புக்கான என்சிஇஆர்டியின் புவியியல் பாட நூலில் இடம் பெற்றுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை விவசாயத்தையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தோட்டக் கலையையும் ஒரு திறன் பாடமாக சிபிஎஸ்இ வைத்துள்ளது. “இந்திய விவசாயிகளின் இணையப் பக்கம்”, “நீடித்த வளர்ச்சிக்கான தேசிய இயக்கம்” ஆகியவற்றின் மூலம் வேளாண் துறையில் அரசால் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1796831)
Visitor Counter : 223