உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2014ஆம் ஆண்டுக்குப்பின், கூடுதலாக 27 உள்நாட்டு விமான சரக்கு போக்குவரத்து முனையங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 07 FEB 2022 4:25PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் திரு. வி.கே.சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2014ம் ஆண்டு வரை இந்தியாவில் 11 உள்நாட்டு விமான சரக்கு முனையங்கள், 19 சர்வதேச விமான சரக்கு முனையங்கள் இருந்தன.  இந்திய விமான நிலையங்கள் ஆணையம் / சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு முனையம் சார்ந்த சேவைகள் நிறுவனம் (AAICLAS) மேலும் 27 உள்நாட்டு விமான சரக்கு முனையங்களை ஏற்படுத்தியுள்ளன. மேலும், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடனும், மாநில அரசு விமான நிலையங்களும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சரக்கு முனையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால், சரக்குகளை கையாளும் திறன் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796158

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1796313) வருகையாளர் எண்ணிக்கை : 291
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Malayalam , English , Manipuri , Urdu , Marathi , Bengali