குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி
प्रविष्टि तिथि:
07 FEB 2022 3:53PM by PIB Chennai
சமாதன் இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி, 3.02.2022வரை, குறு மற்றும் சிறு தொழில் துறையினருக்கு வழங்கப்பட்ட கடனுதவியில், 01.04.2020 முதல் ரூ.11,741.21 கோடி நிலுவையில் இருப்பதாக, மத்திய குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைஅமைச்சர் திரு.நாராயண் ராணே தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க, குறிப்பாக குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு, தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகக் கூறினார். (i)நெருக்கடியில் உள்ள குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000கோடி அளவிற்கு துணைக்கடன்களும், (ii) ரூ.50,000கோடி மூலதன ஊக்குவிப்பு நிதியும் (iii) குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் துறையினருக்கு, 3 லட்சம் கோடி அவசரகடன் உத்தரவாத திட்ட நிதியும் வழங்கப்பட்டிருப்பதுடன், (iv) குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனம் குறித்து புதிய விளக்கம் அளிக்கப்பட்டு, (v)ரூ.200 கோடி வரையிலான அரசு கொள்முதல்களுக்கு சர்வதேச டெண்டர் கோரப்படுவதில்லை என்றும் திரு.நாராயண் ராணே கூறியுள்ளார்.
உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற கடன்வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 லட்சம்(ரூ.2கோடி) வரை, பிணை இல்லாத கடனுதவிகளைப் பெறுவதற்கான திட்டத்தையும், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796144
*******
(रिलीज़ आईडी: 1796259)
आगंतुक पटल : 225