எஃகுத்துறை அமைச்சகம்

உள்நாட்டு எஃகு உற்பத்தித்திறன் இரட்டிப்பாதல்

Posted On: 07 FEB 2022 2:25PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய எஃகு அமைச்சர் திரு. ராம் சந்திர பிரசாத் சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

நாட்டின் தற்போதைய வருடாந்திர கச்சா எஃகு திறன் 144 மெட்ரிக் டன் ஆகும். 2030-31-ம் ஆண்டுக்குள் இது 300 மெட்ரிக் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய எஃகு கொள்கை, 2017, எஃகு உற்பத்தியாளர்களுக்கு கொள்கை ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவதன் மூலம் இந்த நோக்கத்தை அடைவதற்கு உகந்த சூழலை வழங்குவதை லட்சியமாக கொண்டுள்ளது.

2020-21-ல் இந்தியாவில் உற்பத்தித் துறையில் 40% முதலீடு எஃகுத் துறையில் உள்ள நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ளது என்பதிலிருந்து இந்தத் துறைக்கான முன்னுரிமை தெளிவாகத் தெரிகிறது. மேலும், தரவுகளை பகுப்பாய்வு செய்த பிறகு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எஃகு மற்றும் இறக்குமதி மாற்றீட்டின் பயன்பாட்டை  அதிகரிக்க எஃகு அமைச்சகத்தால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796111

 (Release ID: 1796111) 

***************



(Release ID: 1796155) Visitor Counter : 194