சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் 810-வது உரூஸ் விழாவையொட்டி ராஜஸ்தானின் அஜ்மீர் ஷெரீப் தர்காவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சார்பாக மத்திய சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி “சதர்” வழங்கினார்

Posted On: 06 FEB 2022 5:54PM by PIB Chennai

குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் 810-வது உரூஸ் விழாவையொட்டி ராஜஸ்தானின் அஜ்மீர் ஷெரீப் தர்காவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சார்பாக மத்திய சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி “சதர்” வழங்கினார்.

 

வருடாந்திர உரூஸ் விழாவை ஒட்டி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி-யைப் பின்பற்றுபவர்களுக்கு வாழ்த்துகளைத்  தெரிவிக்கும்  பிரதமரின் கடிதத்தை திரு நக்வி வாசித்தார்.

 

"810-வது உரூஸை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி-யின் பின்பற்றுபவர்களுக்கு அன்பான வாழ்த்துகள். அஜ்மீர் ஷெரீப்புக்கு "சதர்" வழங்குவதன் மூலம், மனித  நேயம் குறித்த செய்தியை முழு உலகிற்கும் வழங்கிய சிறந்த சூஃபி துறவிக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் அடையாளம். நாட்டில் பல்வேறு பிரிவுகள், சமூகங்கள் மற்றும் நம்பிக்கைகளின் இணக்கமான சகவாழ்வு எங்கள் பலம்,” என்று தமது வாழ்த்து செய்தியில் பிரதமர் கூறினார்.

 

பெரும் துறவிகள், மகாத்மாக்கள், பீர், ஃபக்கீர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் நாட்டின் சமூக-கலாச்சார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப்  பங்கு வகித்துள்ளனர். இந்தப்  புகழ்பெற்ற பாரம்பரியத்தில், சமூகத்திற்கு அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை வழங்கிய குவாஜா மொய்னுதீன் சிஷ்டி-யின்  பெயர் முழு மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறது என்று திரு நரேந்திர மோடி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். .

 

பிரதமர் தனது செய்தியில் மேலும் கூறியதாவது, "கரிப் நவாஸின் தத்துவம் மற்றும் கொள்கைகள் வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமான உரூஸ், பக்தர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும். இந்த நம்பிக்கையுடன், தர்கா அஜ்மீர் ஷெரீப்பில் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி-யின் வருடாந்திர உரூஸ் நிகழ்வில், நாட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.”

 

சமூகத்தின் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மக்களும் பிரதமரின் “சதர்”-ஐ முழு மனதுடன் வரவேற்றனர்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய  திரு நக்வி, பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிடும்  சூஃபி துறவிகளின் தத்துவம், அவரது தொலைநோக்குப்பார்வை, கலாச்சாரம் மற்றும் உள்ளடக்கிய அதிகாரமளிப்புக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவை "உலகத்தின் குரு" ஆக்குவதற்கான "பயனுள்ள மந்திரம்" என்று நக்வி கூறினார்.

 

இன்று முழு உலகமும் திரு மோடியை நம்பிக்கையுடன் "அமைதியின் ஜோதியாகப் "  பார்க்கிறது என்று அமைச்சர் கூறினார்.  திரு மோடிக்கு சூஃபி துறவிகளின் ஆசீர்வாதங்கள் மற்றும்  சமூகத்தின் ஆதரவின் விளைவு இது என்றார் அவர்.

 

வகுப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்த கரிப் நவாஸின் வாழ்க்கை நம்மை ஊக்குவிக்கிறது என்று திரு நக்வி கூறினார். இந்த ஒற்றுமையால் சமூகத்தில் பிளவு மற்றும் மோதலை உருவாக்கும் சதியில் ஈடுபடும் சக்திகளை முறியடிக்க முடியும். குவாஜா மொய்னுதின் சிஷ்டி-யின் போதனைகள் உலகிற்கு  அமைதி ,இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அர்ப்பணிப்பின் பயனுள்ள செய்தியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795969

****



(Release ID: 1795983) Visitor Counter : 215