நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பாட்னா( பீகார்)விலிருந்து பாண்டு (குவஹாத்தி )வுக்கு உணவு தானியங்களை எடுத்துச் செல்லும் முன்மாதிரி கப்பல் போக்குவரத்து வடகிழக்கு நுழைவாயிலுக்கு புதிய வழியை திறந்து விடும் என திரு. பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
Posted On:
05 FEB 2022 3:20PM by PIB Chennai
பாட்னா( பீகார்)விலிருந்து பாண்டு (குவஹாத்தி)வுக்கு உணவு தானியங்களை எடுத்துச் செல்லும் முன்மாதிரி கப்பல் போக்குவரத்து வடகிழக்கு நுழைவாயிலுக்கு புதிய வழியை திறந்து விடும் என மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம், ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் கூறியுள்ளார். பாட்னாவிலிருந்து பாண்டுவுக்கு உணவு தானியங்களை எடுத்துச் செல்லும் எம்வி லால் பகதூர் சாஸ்திரி கப்பலை காணொலி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், கலுகாட்டில் பன்முக போக்குவரத்து முனையத்துக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய அவர், வடகிழக்கு நுழைவாயிலுக்கு (அசாம்) இந்த 2,350 கி.மீ பயணம் புதிய வழியைத் திறந்து விடும் என்று கூறினார். எம்வி லால் பகதூர் சாஸ்திரி என்ற கப்பலின் பெயர் , ஜெய் ஜவான் ஜெய் கிஷான் என்ற முழக்கம் எழுப்பிய சாஸ்திரியை நினைவு படுத்தியுள்ளதாக கூறினார். நமது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்யும் வகையில் அவர்களது பாதையை விரிவுபடுத்தி தற்சார்பு இந்தியா என்னும் வாழ்க்கை முறையை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி பிரதமரின் கிழக்கு நோக்கிய நடவடிக்கை மற்றும் பீகார், வடகிழக்கை உள்ளடக்கிய வளர்ச்சி என்னும் பிரதமரின் கூட்டு கண்ணோட்டத்துக்கு சரியான எடுத்துக்காட்டாகும் என்று அவர் தெரிவித்தார்.
ரூ.78 கோடியில் திட்டமிடப்பட்டுள்ள கலுகாட் பன்முக போக்குவரத்து முனையம், இந்தப் பிராந்தியத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும், பல மடங்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என்று அமைச்சர் கூறினார். வடக்கு பீகாரில் போக்குவரத்து நெருக்கடி மிக்க சாலைகளின் நெரிசலைக் குறைக்கவும், மாற்று வழியை ஏற்படுத்தவும், உணவு தானியங்கள், வடகிழக்கு பகுதிக்கான சரக்கு போக்குவரத்து ஆகியவற்றுக்கு பெருமளவில் உதவும்.
நீர்வழிகள் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான முழுமையான வளர்ச்சிக்கு அரசு நான்கு பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட திரு. கோயல், உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதுவும் இதில் ஒன்று என்று கூறினார். பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த மேம்பாட்டுக்கான மாறுபட்ட அணுகுமுறை, பிரதமர் கதிசக்தி நீர்வழிகள் திட்டத்தின் கீழ், கூறப்பட்டுள்ள 7 எஞ்சின்களில் ஒன்றாகும்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு. அஷ்வினி குமார் சவுபே , துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணையமைச்சர்கள் திரு. ஶ்ரீபத் நாயக்,திரு .சாந்தனு தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ரவிசங்கர் பிரசாத், திரு. சுசில் குமார் மோடி, திரு. ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்
***************
(Release ID: 1795780)