வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற மத்திய அரசு இயக்கம் மாபெரும் தொழில்நுட்ப ஊக்கத்தைத் தந்துள்ளது

Posted On: 05 FEB 2022 2:55PM by PIB Chennai

வளர்ச்சிக்கும், ஏற்றுமதிக்கும் மிகவும் சிறந்த பொருளாக லக்காடாங் மஞ்சள் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் முன்முயற்சி திட்டமான ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்பதன் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் மேகாலயாவில் உள்ள மேற்கு ஜெயின்டியா குன்றுகளில் பயிரிடப்படுகிறது.

  இந்த மஞ்சள் உலகிலேயே மிகவும் அதிகபட்சமாக 7-9 சதவீத விட்டமின் சி கொண்டதாக உள்ளது.  இதனால் இத்தகைய மஞ்சள் விளையும் லக்காடாங் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறையின் கூடுதல் செயலாளர் திருமதி சுமிதா டாவ்ரா கூறியுள்ளார்.

  இந்த வகை மஞ்சளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது.  சென்ற ஆண்டில் ஒரு கிலோ மஞ்சளின் விலை ரூ.150 என்பதில் இருந்து ரூ.20 அதிகரித்து இந்த ஆண்டு ரூ.170 ஆகியுள்ளது.

 மேகாலயாவின் தொலைதூரப்பகுதியில்  விளையும் இந்த மஞ்சளை மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்குப் போக்குவரத்து பிரச்சனை உள்ளது. இதற்கு தீர்வுகாண தற்போது  ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 உலகில் சாகுபடி செய்யப்படும் மஞ்சளில் 78 சதவீதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது. ஏற்கனவே 25,000 கிலோ கொள்முதல் செய்வதற்கு ஆர்டர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை மேலும் அதிகரிக்க இந்த ஆண்டு இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் திருமதி சுமிதா டாவ்ரா கூறினார்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795761

***************



(Release ID: 1795777) Visitor Counter : 339