ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே திட்டங்களின் தீவிரமான விரைவான அமலாக்கத்திற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
Posted On:
04 FEB 2022 2:23PM by PIB Chennai
2021 ஏப்ரல் 1 நிலவரப்படி சுமார் ரூ.7.53 லட்சம் கோடி செலவு பிடிக்கும் 51,165 கி.மீ. தூர 484 ரயில்வே திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவற்றில் 2021 மார்ச் மாதம் வரை சுமார் ரூ.2.14 லட்சம் கோடி செலவில் 10,638 கி.மீ. தூர ரயில்பாதை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ரயில்வே திட்டங்கள் நிறைவேறுவதற்கு மாநில அரசால் விரைவான நில ஆர்ஜிதம், வனத்துறையின் அதிகாரிகளால் அளிக்கப்படும் சான்றிதழ், செலவைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் மாநில அரசின் செலவுத் தொகை டெபாசிட் போன்ற பல்வேறு அம்சங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
திட்டங்களின் முன்னுரிமை, முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்துதல், கள நிலையில் அதிகாரங்கள் அளிக்கப்படுதல், பல்வேறு நிலைகளில் திட்டங்களில் முன்னேற்றம் குறித்து நெருக்கமாக கண்காணித்தல், விரைவான நில ஆர்ஜிதம், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் துறையின் அனுமதிகள் போன்றவற்றுக்கு மாநில அரசுகளுடன் தொடர்ச்சியான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரயில் திட்டங்களின் தீவிரமான, விரைவான அமலாக்கத்திற்கு அரசு மேற்கொண்டு வருகிறது.
ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795409
***************
(Release ID: 1795457)
Visitor Counter : 221