பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடுக்கடலில் காயமடைந்த மீனவருக்கு மருத்துவ உதவியளித்த ஐஎன்எஸ் ஆதித்யா

प्रविष्टि तिथि: 04 FEB 2022 12:13PM by PIB Chennai

கோவாவிற்கு மேற்கே 75 கடல்மைல் தொலைவில் நின்ற எஃப்.வி.மஹோன்னதன் என்ற மீன்பிடிக் கப்பலிலிருந்து அவசர உதவி கோரி வந்த அழைப்பின்பேரில், அந்த இடத்திற்கு விரைந்த ஐஎன்எஸ் ஆதித்யா கப்பல், படுகாயமடைந்த மீனவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி அளித்தது.  விபின் என்கிற அந்த மீனவரின் வலது கையில் ஏற்பட்ட காயத்தால், அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறியதன் காரணமாக,  ரத்தம்-ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஆபத்தான நிலையில் இருந்தார். 

உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஐஎன்எஸ் ஆதித்யா, காயமடைந்த மீனவருக்கு, அவரது படகில் வைத்தே முதலுதவி சிகிச்சையளித்து,  ஆக்ஸிஜனையும் செலுத்தியதுடன், அவரை கப்பலுக்கு கொண்டு வந்தது.  படகிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு, விபின் என்கிற அந்த மீனவரின் வலது கை விரல்கள் நசுங்கி, முறிவு ஏற்பட்டிருந்தது.  ரத்தப்போக்கைத் தடுக்க அவருக்கு கப்பலிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு, அவரது ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.

மேலும், அந்தப் படகில் இருநதவர்களுக்குத் தேவையான உணவும் வழங்கப்பட்டதுடன், காயமடைந்த மீனவரின் உடல்நிலை சீரடைந்ததும், அவரது சகாக்கள் இருந்த படகில் விடப்பட்டார். 

*****


(रिलीज़ आईडी: 1795439) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Telugu