குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கொவிட் காலகட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி

Posted On: 03 FEB 2022 5:21PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு. நாராயண் ராணே, கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு தற்சார்பு இந்தியா நிதியை இந்திய அரசு தொடங்கியது. அதன் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் விரைவான வளர்ச்சியை ஆதரித்து அதன் மூலம் பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி அளித்து வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி அடைந்து தேசிய/சர்வதேச சாம்பியன்களாக ஆவதற்கு ஆதரவளித்தல்.

* தொழில்நுட்பங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதன் மூலம் இந்தியாவை தன்னிறைவாக மாற்ற உதவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஆதரித்தல்.

"என் எஸ் ஐ சி வென்ச்சர் கேபிடல் ஃபண்ட் லிமிடெட்" என்ற சிறப்பு நோக்க அமைப்பால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. என் எஸ் ஐ  சி வென்ச்சர் கேபிடல் ஃபண்ட் லிமிடெட் அளித்துள்ள தகவலின் படி, ரூ.1,080 கோடிக்கான உறுதிக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795124

**************



(Release ID: 1795252) Visitor Counter : 198


Read this release in: Telugu , English , Urdu , Manipuri