விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

2022 ஆகஸ்ட்டில் சந்திரயான்- 3 -ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 03 FEB 2022 1:27PM by PIB Chennai

2022 ஆகஸ்ட்டில் சந்திரயான்-3- விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், மக்கள் குறைதீர்ப்பு , ஓய்வூதியங்கள், அணுசக்தி , விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

சந்திரயான்-2லிருந்து கற்றுக்கொண்டது மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் சந்திரயான்-3- வெற்றிகரமாக்கும் செயல்கள் நடைபெறுகின்றன என்று அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார். இது தொடர்பான வன்பொருள்கள் அவற்றின் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு 2022 ஆகஸ்ட்டில்  செலுத்த திட்டமிடப்பட்ட்டுள்ளது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 19 செலுத்தல்களுக்குத் திட்டமிட்டுள்ளதாகவும் இவற்றில் 08 செலுத்து வாகனத் திட்டங்கள், 07 விண்கலத் திட்டங்கள், 04 தொழில்நுட்ப செய்முறை திட்டங்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டன. விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புதிதாக அறிமுகம் செயபப்பட்ட தேவையால் இயக்கப்படும் மாதிரிகள் பின்னணியில்  திட்டங்களுக்கு மறுமுன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795030

-----(Release ID: 1795079) Visitor Counter : 210