ஜல்சக்தி அமைச்சகம்
வெற்றிக் கதை: தூய்மை இந்தியா இயக்கம்
Posted On:
02 FEB 2022 4:32PM by PIB Chennai
ஆகஸ்ட் 1, 2021-ல் செயல்படத் தொடங்கியதிலிருந்தே, நிட்டே கிராமப் பஞ்சாயத்தின் (கர்கலா தாலுக், உடுப்பி மாவட்டம், கர்நாடகா) பொருள் மீட்பு வசதி மையம் (எம்ஆர்எஃப்) கார்கலாவில் உள்ள 41 கிராம பஞ்சாயத்துகளுக்கு பயனுள்ள கழிவு மேலாண்மை சேவைகளை வழங்கியுள்ளது. உடுப்பி, கௌப் மற்றும் ஹெப்ரி ஆகிய பகுதிகள் இந்தத் திட்டத்தின் கீழ் வரும்.
உடுப்பி மாவட்ட பஞ்சாயத்தால் இந்தத் திட்டம் மேற்பார்வையிடப்படுகிறது. சாஹாஸ் ஜீரோ வேஸ்ட் பிரைவேட் லிமிடெட் திட்ட செயலாக்கத்திற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்கும் நிலையில், மங்களூருவில் உள்ள மங்களா ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்த வசதியின் செயல்பாட்டைக் கையாளுகிறது.
திட்டத்தின் நோக்கங்கள்:
* குறைந்தளவு மனித வள பயன்பாட்டுடன் மையப்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை சேவைகளை வழங்குதல்
* சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் கழிவுகளிலிருந்து அதிகபட்ச வளங்களைப் பெறுதல் மற்றும் விஞ்ஞான அடிப்படை அற்ற மற்ற கழிவு மேலாண்மையைத் தடுப்பது
* எளிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மனித வளங்களின் செயல்திறனை அதிகரித்தல்
* பல அடுக்கு பிளாஸ்டிக் போன்ற மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அப்புறப்படுத்துதல்
* அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி மையங்களுக்குக் கழிவுகளை அகற்றுதல்
* திறமையான வசதிகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்
* கழிவு மேலாண்மை குறித்த ஆவணங்களை பராமரித்தல்
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794707
-----
(Release ID: 1794856)
Visitor Counter : 194