பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

கோவிட்-19 காரணமாக அனாதையான குழந்தைகளுக்கு உதவி: தமிழகத்தில் 324 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்

Posted On: 02 FEB 2022 4:56PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று காரணமாக இரு பெற்றோர்கள் அல்லது இருக்கும் பெற்றோர், சட்டரீதியான பாதுகாவலர் அல்லது தத்தெடுத்த பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவும் பிரதமரின் கவனிப்பு   (பி.எம்.கேர்ஸ்) திட்டத்தை மாண்புமிகு பிரதமர் அறிவித்தார்இத்திட்டத்தின் பயன்களை pmcaresforchildren.in என்ற இணையளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி 31ம் தேதி வரை 6626 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 3,855 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. தமிழகத்திலிருந்து 496 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 324 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இத்தகவலை மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக இன்று தாக்கல் செய்த பதிலில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794724

------



(Release ID: 1794824) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Marathi , Bengali