சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பசுமை நெடுஞ்சாலை கொள்கையின்கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை

Posted On: 02 FEB 2022 3:42PM by PIB Chennai

பசுமை நெடுஞ்சாலைகள் (மரம் நடுதல், மரங்களை இடமாற்றி நடுதல், அழகுபடுத்துதல் & பராமரிப்பு) கொள்கை 2015, நாட்டிலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும், பசுமைத் தடங்களாக மாற்ற வகை செய்கிறது.   இந்தக் கொள்கையின்படி, 51,178கி.மீ தொலைவுக்கான 869 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில், டிசம்பர் 2021 வரை 244.68 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளனதமிழ்நாட்டில் மொத்தம் 66 திட்டங்களில், 3,767.103கிமீ தொலைவுக்கு 14.27 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.  

அந்தந்தப் பகுதி உள்ளூர் வகை தாவரங்கள்அதிகம் பரவாத புற்கள், அலங்காரச் செடிகள்  மற்றும் அலங்கார வகையைச் சாராத, அனைத்துப் பருவ காலத்தையும் தாக்குப்பிடிக்கக்கூடிய நிழல்தரும் மரங்கள், இந்திய சாலைப் போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டுதல்படி நடப்பட்டுள்ளதாகவும் திரு.நிதின் கட்கரி கூறியுள்ளார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1794693

                                                                 ***** 



(Release ID: 1794751) Visitor Counter : 178