சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

புதிய இந்தியாவுக்கு புதிய கண்ணோட்டம் வழங்கும் வரலாற்று பட்ஜெட் என திரு.நிதின் கட்கரி புகழாரம்

Posted On: 01 FEB 2022 4:39PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, புதிய இந்தியாவுக்கு புதிய கண்ணோட்டம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட் என பாராட்டியுள்ளார். இது 21 ஆம் நூற்றாண்டுக்கு சரியான பொருளாதார தொலைநோக்கு வழங்கும் பட்ஜெட் என்றும், இதற்கான முன்னுரிமை பட்ஜெட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஷெல்யூட்டு பிரிவினர், பழங்குடியினர், விவசாயிகள், கிராமப்புற இந்தியா, வேளாண் இந்தியா, பழங்குடியின இந்தியா உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் உயர் முன்னுரிமை இந்தப் பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ளது என்று திரு.கட்கரி தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்புக்கு இரண்டாவது உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், ஏற்கனவே பாரத் மாலா, சாகர் மாலா திட்டங்களில் பணியாற்றிய தமக்கு இப்போது புதிய திட்டமான பர்வதமாலாவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். ரோப்வே, கேபிள் கார் ஆகியவை நாட்டின் மலைப்பகுதிகளுக்கு பெரும் பரிசு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வாய்ப்பு இருப்பதால் பொருட்கள் போக்குவரத்து மட்டுமல்லாமல் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் புதிய தொலைநோக்கை பட்ஜெட் பிரதிபலிப்பதாக கூறியுள்ள அவர், நாட்டுக்கு இந்த அற்புதமான பட்ஜெட்டை வழங்கியதற்காக நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

••••



(Release ID: 1794433) Visitor Counter : 130