நிதி அமைச்சகம்

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் 2021-2022-ல் வலுவாக மீண்டு வருகிறது

Posted On: 31 JAN 2022 2:59PM by PIB Chennai

கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம், இப்போது வலுவான மூலதன வரவு மூலம் மீண்டு வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2021-22 கூறுகிறது. இதன் மூலம் அந்நியச் செலவாணி கையிருப்பு கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. 

"பொருட்களுக்கான உலகளாவிய தேவை மீண்டும் அதிகரித்துள்ளதாலும்உள்நாட்டு நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றதன் காரணமாகவும்இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திறன், கொரோனாவிற்கு முந்தைய காலத்தில் இருந்ததை விட அதிகரித்துள்ளது. 2021-2022 ஆம் ஆண்டுக்கு நிர்யிக்கப்பட்ட 400 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கில், 75 சதவீதம் ஏற்கனவே எட்டப்பட்டு விட்டது. இதனால் இந்த இலக்கை நிச்சயம் அடைந்து விட முடியும்," என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

விவசாயம் சார்ந்த ஏற்றுமதி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. விவசாயம் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டை விட ஏப்ரல் - நவம்பர் 2021ல்  23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் வணிகப் பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறை 142.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என்று இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கோவிட் 19க்குப் பிந்தைய காலத்தில்உலக சேவை வர்த்தகத்தில் இந்தியா தனது சிறப்பான செயல்திறனை தொடர்ந்து அளித்து வருகிறது. இதனால் சேவை வர்த்தகத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டை விட ஏப்ரல்-டிசம்பர் 2021ல்  18.4 சதவீத வளர்ச்சி காணப்படுகிறதுஎன்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.  

நவம்பர் 2021 நிலவரப்படிசீனாஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக, உலகில் நான்காவது பெரிய அந்நிய செலாவணி இருப்பு இந்தியாவிடம் தான் இருந்தது. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரத்திற்கு உகந்ததாக மதிப்பிடப்பட்டதை விடக் குறைவாகவே உள்ளது,” என்று இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.

இருப்பினும்உலகளாவிய பணப்புழக்க இறுக்கம் மற்றும் பொருட்களின் விலைகளில்  தொடர்ச்சியான ஏற்ற இறக்கம்அதிக போக்குவரத்து செலவுகள் மற்றும் இவற்றுடன் கோவிட் 19 இன் புதிய பரிமாணத்தால்  எதிர்மறையான அபாயங்கள் இருப்பதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

***************(Release ID: 1793930) Visitor Counter : 1254