கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியாவில் பசுமைத் துறைமுகங்கள் மற்றும் பசுமைக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பசுமை முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து திரு சர்பானந்த சோனோவால் ஆய்வு
Posted On:
29 JAN 2022 6:48PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், அனைத்துப் பெரிய துறைமுகங்கள், கொச்சி கப்பல்கட்டும் தளம், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்தியாவில் பசுமைத் துறைமுகங்கள் மற்றும் பசுமைக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு, கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030-திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட பசுமை முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030-ன் கீழ், திட்டமிடப்பட்ட பசுமைத் துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பான முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து திரு சோனோவால் ஆய்வு மேற்கொண்டார். இந்த திட்டத்தின் கீழ், ரூ.6,77,720.24 கோடி மதிப்பிலான முதலீட்டுடன், பெரிய துறைமுகங்கள் உள்ளிட்ட மொத்தம் 963 முன்முயற்சிகள் அடையாளம் காணப்பட்டன. இதில், ரூ.44, 424.47 கோடி மதிப்பிலான 208 முன்முயற்சிகள் 2021 நிதியாண்டில் முடிவடைந்தன.மேலும், ரூ.48,256.14 கோடி மதிப்பிலான 504 முன்முயற்சிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பசுமை துறைமுகங்கள் முன்முயற்சிகளில், சுற்றுச்சூழல் மாசுவைக் கண்காணிக்கும் உபகரணங்கள், தூசி தடுக்கும் கருவிகள் வாங்குதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், துறைமுகங்கள் மற்றும் கப்பல்களிலிருந்து குப்பைகளை அகற்றும் கருவிகளை அமைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தித் திட்டங்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793524
******************
(Release ID: 1793531)
Visitor Counter : 281