அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விண்வெளிக் கதிர்வீச்சுச் சூழலைப் பற்றி விவாதித்தனர்
Posted On:
28 JAN 2022 3:32PM by PIB Chennai
"விண்வெளிக் கதிர்வீச்சுப் பயிலரங்கு: சூரியனில் இருந்து பூமி, சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கப்பால் கதிர்வீச்சுத் தன்மை" என்ற தலைப்பிலான இந்திய-அமெரிக்கப் பயிலரங்கில், இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கள வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். ,
24 முதல் 28 ஜனவரி 2022 வரை நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் விண்வெளி கதிர்வீச்சு சூழலை வகைப்படுத்துவது முதல் வானியல், அதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் கருவிகளின் பயன்பாடு வரையிலான தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவரான திரு கிரண் குமார், இந்தியாவின் முந்தைய விண்வெளிப் பயணங்கள் மற்றும் 2025 வரையிலான புதிய பயணங்கள் குறித்து விளக்கினார். குறைந்த வளங்களுடன் தனது பயணத்தை இஸ்ரோ எவ்வாறு எளிமையாகத் தொடங்கியது என்பதை அவர் எடுத்துரைத்தார். இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க சில விண்வெளிப் பயணங்கள் பற்றி அவர் பேசினார்.
75 வருட இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான ஆர்யபட்டா ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அப்சர்வேஷனல் சயின்ஸஸ் -ஆல் நடத்தப்பட்ட இந்த பயிலரங்கு இந்திய-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் ஆதரவைப் பெற்றதாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793254
*******************
(Release ID: 1793359)
Visitor Counter : 154