நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சாரத் துறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரமாக மாநிலங்களுக்கு ரூ 7,309 கோடி வழங்கப்பட்டுள்ளது; முன்வடிவை சபர்ப்பித்துள்ளது தமிழகம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 JAN 2022 6:12PM by PIB Chennai

மின் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக 7,309 கோடி ரூபாய்

கூடுதல் கடன் வாங்க இரண்டு மாநிலங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

 

சீர்திருத்தச்  செயல்முறையைத்  தொடங்க ஊக்கத்தொகையாக ரூ 5,186 கோடி கூடுதல் கடன் பெற ராஜஸ்தானுக்கும், ரூ 2,123 கோடி கூடுதல் கடன் வாங்க ஆந்திரப் பிரதேசத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மின் துறையில் மாநிலங்கள் மேற்கொண்ட சீர்திருத்தத்தின் அடிப்படையில், பதினைந்தாவது நிதிக் குழுவின் பரிந்துரைகளைச்  சார்ந்து, 2021-22 முதல் 2024-25 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதம் வரை கூடுதல் கடன் வாங்குவதற்கான வசதியை மாநிலங்களுக்கு வழங்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 

மின் துறை சீர்திருத்தங்களுடன் இணைக்கப்பட்ட கூடுதல் கடன் வாங்கும் தகுதியைப் பெற, கட்டாயச்  சீர்திருத்தங்களை மாநில அரசு  மேற்கொள்ள வேண்டும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறன் அளவுகோல்களையும் சந்திக்க வேண்டும்.

 

இதற்கிடையே, அசாம், கோவா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களும் தங்கள் முன்வடிவுகளை மின் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன. மின்சார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தகுதியுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் கடன் வாங்குவதற்கான அனுமதி வழங்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793309

                                                                                                *************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1793356) வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu