ரெயில்வே அமைச்சகம்
ஆர்ஆர்பி என்டிபிசி தேர்வர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க ரயில்வே நடவடிக்கை
प्रविष्टि तिथि:
28 JAN 2022 3:56PM by PIB Chennai
ஆர்ஆர்பி-யின் மத்திய வேலைவாய்ப்பு நோட்டீஸ் 1/2019-ன் கீழ் (நான் டெக்னிக்கல் பாப்புலர் கேட்டகரிஸ் – கிராஜூவேட் & அன்டர் கிராஜூவேட்) நடைபெறும் ஆட்சேர்ப்பு தேர்வில், 14.01.2022 அன்று வெளியான முடிவுகளின்படி, இரண்டாவது கட்டத்திற்கு தேர்வர்களை தேர்வு செய்யும் நடைமுறை குறித்து சில தேர்வர்கள் எழுப்பிய பிரச்சனை குறித்து ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இரண்டாம் கட்ட தேர்வு மற்றும் சிபிடி லெவல்-1 முதல்கட்ட தேர்வுகளை ஆர்ஆர்பி ஒத்திவைத்துள்ளது.
கணினி சார்ந்த தேர்வின் முதற்கட்ட முடிவுகள் தொடர்பாக தேர்வர்கள் எழுப்பிய சந்தேகங்களை கவனிக்க மூத்த அதிகாரிகளை கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை குழுவிடம் 16.2.2022 வரை rrbcommittee@railnet.gov.in என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
இவற்றை ஆராய்ந்து குழு தனது பரிந்துரைகளை 2022 மார்ச் 4-ந் தேதி தாக்கல் செய்யும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793259
***************
(रिलीज़ आईडी: 1793317)
आगंतुक पटल : 193