மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2020-21-ம் ஆண்டுக்கான பங்குத் தொகையாக ரூபாய் 11.5 கோடியை செலுத்திய எட்ஸில்

இடுகை இடப்பட்ட நாள்: 27 JAN 2022 6:56PM by PIB Chennai

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் முதல் பிரிவு மினி ரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான எட்ஸில் (இந்தியா) லிமிடெட், 2020-21-ம் ஆண்டுக்கான பங்குத் தொகையாக ரூபாய் 11.5 கோடியை செலுத்தியது.

 

இதுவரையிலான அதிக விற்றுமுதலாக ரூபாய் 332.83 கோடியை பதிவு செய்துள்ள நிறுவனம், 2020-21-ம் ஆண்டில் ரூபாய் 36.89 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது.

 

பங்குத் தொகைக்கான காசோலையை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு மனோஜ் குமாரிடமிருந்து மத்திய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் பெற்றுக்கொண்டார். 2022 ஜனவரி 27 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வின்போது கல்வி அமைச்சகம் மற்றும் எட்ஸில் (இந்தியா) லிமிடெட் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

பெருந்தொற்று காலம் உட்பட தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் எட்ஸில் நிறுவனத்தை பாராட்டிய அமைச்சர், ஆலோசனை, டிஜிட்டல் மற்றும் கல்வி சேவைகளை வழங்கி வருவதற்காகவும் நிறுவனத்தை புகழ்ந்தார். இன்னும் பல விவரங்களை எட்ஸில் எட்ட வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793019

                                                                                ************************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1793051) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: Tamil , English , Urdu , हिन्दी , Punjabi